#JUST IN : கட்சியை விட்டு விலகுகிறேன்..!
கோவை கனியூரில் பார்க் பொறியியல் கல்லூரி நடத்தி வருபவர் அனுஷா ரவி.
அமெரிக்காவில் படித்தவர், தேர்தல் செலவுக்கு அஞ்சாதவர், கல்வியாளர், என பரிமாணங்களை கொண்டவர் அனுஷா ரவி.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே திருப்பூரில் போட்டியிட்டு திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுத்தவர். இதனால் கோவையில் இவர் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மநீமவில் இருந்து விலகுவதாக அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த மனவருத்தத்துடன் இப்பதிவிடுகிறேன் @maiamofficial @ikamalhaasan 🙏என்னுடன் பயணித்த மய்ய உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 pic.twitter.com/zCPvQ96MXU
— Anusha Ravi (@DrAnusharavi) March 16, 2024