#JUST IN : வேட்டையன்' சிறப்பு காட்சிக்கு அனுமதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் வேட்டையன். இது நாளை அக்டோபர் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது. வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து கதை குறித்தும், படம் பேசப்போகும் விசயங்கள் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியது.
வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் முதல் நாளிற்கான பெரும்பான்மையான டிக்கெட் புக் ஆகியுள்ளது.
இந்நிலையில், 'வேட்டையன்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.