1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Q

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்தான குழப்பங்கள் தற்போது நிலவி வருகிறது. அதன்படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் இறுதி தேர்வுகள் முடிவடையும் நிலையில், ஏப்ரல் ஆறாம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கப்படுகிறது. மேலும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதியுடன் பள்ளிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் 24 ஆம் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 6ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ரம்ஜான் மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஏப்ரல் 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஏப்ரல் 15 முதல்19 வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like