#JUST IN : செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மீண்டும் மறுப்பு..!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார். 2வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து, ஜாமீன் தர நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்