#JUST IN : 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும். புயல் பாதிப்பு நிலைமை சீரானதுடன் ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், நான்கு மாவட்டங்களில் தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் அளித்து வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நாளை (டிச.07) முதல் அரையாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.