#JUST IN : உடனே கைதாகிறார் முன்னாள் சிறப்பு டிஜிபி..!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் -க்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு கோரிய ராஜேஷ்தாஸ் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜேஷ்தாஸூக்கு விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் உடனே கைது செய்யப்படுவார்
உடனடியாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.