#JUST IN : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது..!
கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சோ்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.