1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்..!

1

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்து இலங்கை அரசு நாட்டுடைமையாக்கி வருகிறது.
 
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அண்மையில் கைதான மூன்று மீனவர்களுக்கு  இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் சிறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி பேரணி சென்று தங்களது அரசு அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக முக்கிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்த நிலையில் மீனார்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

Trending News

Latest News

You May Like