#JUST IN : ஃபெலிக்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக, இன்று (செப்.30) அதிகாலை பத்திரிக்கையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவரை உடனடியாக பரிசோதித்த நிலையில், தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.