1. Home
  2. தமிழ்நாடு

JUST IN : பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் மர்மப் பொருள் வெடிப்பு..!

1

பெங்களூரில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் ராமேஸ்வரம் கஃபே ஒருக்கும் இடத்தை பார்த்தாலே கூட்டம் அலைமோதும். சில சமயங்கள் சாலை வரையிலும் கூட்டம் இருப்பதை காண முடியும். அப்படியென்ன ஸ்பெஷல் என்றால் கமகமக்கும் உணவுகள், தென்னிந்திய உணவுகளை மக்கள் அதிக விரும்புவது, உணவகத்தின் கமகமக்கும் காஃபி என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பெங்களூரில் இந்திரா நகர், ஜேபி நகர், புரூக்ஃபீல்டு, ராஜாஜி நகரில் நான்கு கிளைகளை வைத்துள்ள ராமேஸ்வரம் கபே இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கிளைகளுடன் ராமேஸ்வரம் கபே தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பலத்த சப்தத்துடன் மர்மப் பொருள் சற்று முன் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

மேலும் சிலிண்டர் வெடித்ததா, குண்டு வெடிப்பா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

 

Trending News

Latest News

You May Like