1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 1 மணி வரை 42.41% ஓட்டுப்பதிவு..!

Q

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., பா.ஜ., தேர்தலை புறக்கணித்துள்ளன.

ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

2,27,237 பேர் ஓட்டளிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரம்பட்டி ஓட்டுச்சாவடியில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் ஓட்டளித்தார். முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.03% ஓட்டுப் பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 1 மணி வரை 42.41% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like