#JUST IN : மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.