1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை..!

Q

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத்துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு போன்ற இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. சோதனைக்கான அடிப்படை காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Trending News

Latest News

You May Like