1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ போட்டி..!

1

மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறது மதிமுக. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில்,  நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பின்வரும் திருச்சி தொகுதி தொகுதியில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திருச்சி தொகுதி கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like