#JUST IN : திமுகவினர் அதிர்ச்சி..! சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்தார்..!
மறைந்த திமுக முன்னணித் தலைவர் சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே நகரின் முன்னாள் வேட்பாளருமான சிம்லா முத்துச் சோழன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
ஆர்கே நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக தரப்பில் போட்டியிட்டவர் சிம்லா முத்து சோழன். அப்போது அந்த தேர்தலில் ஜெயலலிதாவே வென்றார்.இருந்தாலும் சிம்லா முத்துச் சோழன் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஒரு மாநில முதல்வரிடம் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த அவர் அதிமுகவில் ஐக்கியமானது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாள்களாக அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.