#JUST IN : தேமுதிக “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெறும் - பிரேமலதா..!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி தேமுதிக “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெறும் என்று விஜயகாந்த் பிறந்த நாளான இன்று பிரேமலதா அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 2.45 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.