#JUST IN : புதிய கட்சியை தொடங்கும் கூல் சுரேஷ்..!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது . வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துவைக்க வேண்டுமென ஏற்கெனவே அறுவுறுத்தப்பட்டு இருந்தது.காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.
இதில், நடிகர் கூல் சுரேஷ் தனது வாக்கினை செலுத்தினர். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2026ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும். அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை தெரிவிப்போம். கட்சி பெயர் CSK - Cool Suresh katchi, விரைவில் பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும்: நடிகர் கூல்சுரேஷ் பேட்டி#CoolSuresh #assemblyelections #DinakaranNews pic.twitter.com/z1dlRx9pVK
— Dinakaran (@DinakaranNews) April 19, 2024