#JUST IN : காங்கிரஸ் கட்சியின் முதல்கட்டமாக 39 வேட்பாளர்கள் அறிவிப்பு..!
காங்கிரஸ் கட்சி அவர்களது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இன்றே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழகத்தில் இன்னும் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்டமாக 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கவுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், பெங்களூரு புறநகர் தொகுதியில் டி.கே.சுரேஷும் போட்டியிடவுள்ளனர். இந்த 39 பேர் பட்டியலில் 24 தலித் வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.