#JUST IN : குவியும் வாழ்த்துக்கள்..! 8 ஆண்டுகளுக்கு பின் தந்தையான ஜாகீர் கான்..!

ஜாகீர் கான் மற்றும் நடிகை சாகரிகா காட்கே தம்பதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்து, இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நவம்பர் 2017 இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தங்கள் மகனின் பெயர் ஃபதேசிங் கான் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து, அவர்களின் புதிய அத்தியாயத்தின் மகிழ்ச்சியை, குடும்ப புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட படங்களில், ஜாகீர் புதிதாகப் பிறந்த குழந்தையை மடியில் மென்மையாக வைத்திருப்பதைக் காணலாம்.
"அன்பு, நன்றியுணர்வு மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களுடன் எங்கள் விலைமதிப்பற்ற சிறிய ஆண் குழந்தை ஃபதேசிங் கானை வரவேற்கிறோம்" என்று தம்பதியினர் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.