#JUST IN : கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
கன்னியாகுமரிக்கு முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாறைக்கு செல்வோர் அனைவருமே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்க உள்ளார்.