#JUST IN : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!!
முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்.02) டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இணைந்துள்ள அவர், நெல் கொள்முதல், மழைக்கால முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையின் போது கேட்டறிகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருவதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.