1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தொடர் சிகிச்சையில் முதல்வர்..! மீண்டும் நேரில் பார்க்க வந்த அழகிரி..!

Q

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியின் போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சோதனையில் உடல்நிலை இயல்பாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 5ஆவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதலமைச்சரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே, 6வது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like