#JUST IN : சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை மூடல்..!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கருணாநிதி வீட்டையும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் புயல் நெருங்கி வருவதால் புயலை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மெரினா கடற்கரையில் வீசும் பயங்கர காற்றால் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலை வரை மூடப்பட்டது.வாகனங்கள் அனுமதி இல்லை, பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.