1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது..!

Q

பெங்களூரு பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபேவில் இன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது.

உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 

இந்நிலையில் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இது குண்டுவெடிப்புதான் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்திருக்கிறார்.குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மனதை பதற வைக்கின்றன.

Trending News

Latest News

You May Like