#JUST IN : கேப்டனுக்கு பத்மபூஷன் விருது..! ஜனாதிபதியிடம் விருது வாங்கிய பிரேமலதா..!

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் அதில் இடம்பெறவில்லை.
இதையடுத்து 2வது கட்டமாக இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினர்.இந்த விருதினை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றவுடன் பிரேமலதா மேலே பார்த்து கேப்டனை நினைவு கூர்ந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் பத்ம பூஷன் விருது என்பது 3வது .உயரிய விருதாகும். இது மறைந்த நடிகர் விஜயகாந்தின் புகழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது..! pic.twitter.com/e9Azcj7uSA
— newstm (@newstmlive) May 9, 2024