1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : 96 தொகுதிகளில் 4ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது!

1

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ம் தேதி தொடங்கி கடந்த ஏப். 26, மே 7ம் தேதியுடன் மூன்று கட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் வரும் 13ம் தேதி, 20ம் தேதி, 25ம் தேதி, ஜூன் 1ம் தேதி ஆகிய 4 கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டியுள்ளது. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட 96 தொகுதிகளில் சூடுபிடித்துள்ளது.

வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
 

4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் தற்போது நிறைவடைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like