#JUST IN :கடலூரில் பேருந்துகள் நிறுத்தம்..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி என்.எல்.நி. நிறுவனத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர்.
இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதிலுக்கு பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.
இந்த நிலையில், கலவரம் தொடர்பாக சங்கர் ஜிவால் கூறியதாவது: நெய்வேலி கலவரம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள், காவல்துறை வாகனங்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து நெய்வேலியில் வன்முறை வெடித்து போராட்டக் களமாக மாறியது. போலீசார் தடியடி கண்ணீர் புகை கொண்டு வீச்சு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அண்டை மாவட்ட போலீசார் நெய்வேலி விரைந்துள்ளனர்.
நெய்வேலியில் பாமக தலைவர் அன்பமணி ராமதாஸின் போராட்டத்தில் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் – நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருச்சி, தஞ்சை மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.