#JUST IN : ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே பிளாட்பாரங்கள், லக்கேஜ் வைக்கும் இடங்களில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், மாநகர காவல் துறை, ரயில்வே காவல்துறை தீயணைப்பு துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இது வெறும் புரளி என தெரியவந்தது.