1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ..!

Q

தெலங்கானா எம்எல்ஏ டி. ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார்.

தனது கட்சிப் பதவி ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில் "ராமசந்தர் ராவ் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. எனக்கு மட்டுமல்ல, கட்சியின் ஏற்றத்தாழ்வில் நின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள், வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்கும் வாசலில் நிற்கும் நேரத்தில், இதுபோன்ற ஒரு தேர்வு நாம் செல்லும் திசை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. பதவிக்கு பொறுத்தமான ஏராளமான தலைவர்கள் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like