1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : அதிர்ச்சியில் பாஜக..! அசன்சோல் வேட்பாளர் என அறிவித்த ஒரே நாளில் பிரபல பாடகர் திடீர் விலகல்..!

1

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.

மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக நடிகர் பவன் சிங் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹா களமிறங்குவார் என்பதால் நாடறிந்த நட்சத்திர தொகுதியாக மாறியது அசன் சோல்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று பவன் சிங் இன்று(மார்ச்.3) தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பாடகர் பவன் சிங் பதிவிட்டுள்ளதாவது, பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக  என் மீது நம்பிக்கை வைத்து, ஆசன்சோல் வேட்பாளராக என்னை அறிவித்தது, ஆனால் சில காரணங்களால் என்னால் ஆசன்சோலில் இருந்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like