#JUST IN : முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை..!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அதுமட்டுமின்றி கோவை, திருப்பூருக்கு நாளை செல்ல உள்ள நிலையில் வழக்கமான உடல் பரிசோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரை 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.
இன்று காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
