#JUST IN : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை..!

டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, போராட்டத்திற்கு செல்லும் வழியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நானும் பா.ஜ., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பா.ஜ.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் முதல் குற்றவாளி. செந்தில் பாலாஜி 2வது குற்றவாளி தான். ஒரு அமைச்சருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலீசாரின் மீது நம்பிக்கை இருந்ததால் தேதி அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம். இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். அப்போது என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.
பா.ஜ., மீதான பயத்தின் காரணமாக போராட்டம் தடுக்கப்படுகிறது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். பயம் இருந்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு வர பா.ஜ., போராடுகிறது.
முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., சந்திக்க உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை#Chennai | #Annamalai | #BJP | #Tasmac pic.twitter.com/WZmxTKwnH7
— Polimer News (@polimernews) March 17, 2025
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை#Chennai | #Annamalai | #BJP | #Tasmac pic.twitter.com/WZmxTKwnH7
— Polimer News (@polimernews) March 17, 2025