#JUST IN : அதிமுகவுடன் கூட்டணி உறுதியானது..!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியுடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்துக்கு சென்று அதிமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பேச்சவார்த்தை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, அதிமுக, புதிய தமிழகம் இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுகவுடன் கூட்டணி உறுதியானது.
விரைவில் எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்படும் என்றார். அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என வேலுமணி தெரிவித்தார்.