1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்..!

Q

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன். 

இவர் ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். மக்களவை தேர்தலில் அவருக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்கி அதிமுக அறிவித்தது.

இந்த நிலையில் கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்லா முத்துசோழன். 

மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட சிம்லா முத்துசோழனுக்கு அதிமுக வாய்ப்பளித்தது. 

இந்த நிலையில், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு சீட் வழங்குவதா என அதிமுகவில் எதிர்ப்பு எழுந்ததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like