1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் நடிகை மீனா..! பாஜகவில் இணைகிறாரா ?

1

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள், தங்களது வீடுகளில் இந்நாளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கலை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ள பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும்  பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து பொங்கல் பரிமாறி மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள்.

கடந்த ஆண்டு, டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடியும்  எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.  இந்த ஆண்டும் அதேபோல முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.

பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். 

விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றனர்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை மீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகை மீனாவும் பங்கேற்றுள்ளது அவர் பாஜகவில் இணைய போகிறாரா என்ற சந்தேகத்தை, வரவைத்துள்ளது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் மீனா மட்டும் கலந்துகொண்டுள்ளார். மீனாவின் தோழிகளான குஷ்பூ. கலா மாஸ்டர் என பலரும் பாஜகவில் இருப்பதால் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like