1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : எப்போது வேண்டுமானாலும் நடிகை கஸ்தூரி கைதாக வாய்ப்பு..!

1

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து மிகவும் மோசமான முறையில் நடிகை கஸ்தூரி அவதூறாகப் பேசியிருந்தார். இதனை எதிர்த்து பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.


மேலும் நடிகை கஸ்தூரி மீது பல இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தலைமறைவான கஸ்தூரியைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு செய்திருந்தார்.


இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கஸ்தூரியின் பேச்சைக் கடுமையாகச் சாடியதோடு முன்ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கஸ்தூரி பேசிய பேச்சு எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டி உள்ளது.

கஸ்தூரியின் பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் அது வெடிகுண்டு போல் உள்ளது.

கஸ்தூரியின் ட்வீட், மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை.

இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படாது

சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லிலிருந்து வெளியேறிய அம்பு போல அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது.என கூறினார் 

மேலும் தலைமறைவாக உள்ள கஸ்தூரியை 2 தனிப்படைகள் அமைத்து தேடிவரும் நிலையில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like