#JUST IN : நடிகர் சேசு மருத்துவமனையில் அனுமதி..!
'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் சேசு. இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
சின்னத்திரையிலும் - வெள்ளித்திரையில் லட்ச கணக்கில் சம்பாதிக்கவில்லை என்றாலும், 10க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் சேசு
இந்நிலையில் நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.