1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான துவாரகீஷ் காலமானார்..!

1

 கன்னட திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான துவாரகீஷ் (81) செவ்வாய்க்கிழமை காலமானார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காலையில் எழுந்ததும் காபி குடித்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. துவாரகீஷ் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் யோகி தெரிவித்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தமிழில் அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை, சாருலதா, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like