#JUST IN : இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புகிறார் நடிகர் அஜித்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று முடிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித்குமார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரின் அஜித்குமார் தற்போது அதற்குரிய சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார் அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா
இதையடுத்து அஜித்குமார் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர் ஐசியூவில் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாவது சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார்.
மேலும் காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பு வீக்கம் அடைந்ததால் நடிகர் அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்