1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : வெற்றி துரைசாமி மறைவு - நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்..!

1

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஷாங் நாளா பகுதியில் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது.விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்தது. 

வெற்றி துரைசாமியின் சடலத்தை மீட்டு சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஆறு மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில், தனது நண்பரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வந்துள்ளார். இந்த வீடியோ இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.



 

Trending News

Latest News

You May Like