1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : குழந்தைகளை கொன்ற வழக்கு: அபிராமி குற்றவாளி என தீர்ப்பு..!

1

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதலங்களில் வைரலாக இருந்தவர் மியூசிக்கலி அபிராமி. தினசரி மியூசிக்கலியில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அஜய்(7) என்ற மனும், கார்னிகா(4) என்ற மகளும் இருந்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விஜய் வேலை செய்து வந்ததால், இவரது குடும்பம் குன்றத்தூரில் வாடகை வீட்டில் குடியேறியது. 

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி அதிகமாக இருந்ததால் அன்று இரவு வங்கியிலேயே இருந்துவிட்டார் விஜய்.மறுநாள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்துபோது கதவு மூடப்பட்டிருந்தது.  

இதனால் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அபிராமி சென்றிருக்கலாம் என்று கருதிய விஜய் தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கிருந்த அபிராமியின் பெற்றோர் தங்களது மகள் இங்கு வரவில்லை என்று கூறி இருக்கின்றனர். இதையடுத்து மீண்டும் வீட்டுக்கு வந்த விஜய், கதவை திறந்து உள்ளே சென்றபோது அவரது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் கத்தி கதறியதில் அருகில் இருந்தவர்களும் வந்துவிட்டனர். 

இது தொடர்பாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து குன்றத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது விஜய் தனது குடும்பத்தோடு அருகில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு சென்று  வந்தபோது அங்கு வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 
இதனால் அந்த கடைக்கு அடிக்கடி சென்று பிரியாணி வாங்கி வந்துள்ளார் அபிராமி. 

இந்த நிலையில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து சில வாரங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு அபிராமி எங்கேயோ சென்றுவிட்டார். பின்னர் வந்த அவரிடம் அபிராமியின் பெற்றோர்கள் அறிவுரை வழங்கி கணவருடன் சேர்ந்து வாழும்படி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சுந்தரத்துடன் வாழ விரும்பிய அபிராமி, குழந்தைகள் இடையூறாக இருந்ததால் அவர்களை கொல்ல திட்டமிட்டு, பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அம்மா தான் கொடுக்கிறார் என்ற  நம்பிக்கையில் பாலை வாங்கி குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளை கொன்று விட்டு அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பி சென்று விட்டார். 

இந்த நிலையில் சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரை வைத்து அபிராமி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். 

போலீசார் சொன்னபடி சுந்தரம், அபிராமிக்கு தொடர்பு கொண்டு எங்கிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

இதற்கு அபிராமி நாகர்கோயிலில் இருக்கிறேன் என்று சொன்னதும், சுந்தரத்தை அழைத்துக் கொண்டு போலீசார் நாகர்கோயில் புறப்பட்டனர். 

நாகர்கோயிலை அடைந்ததும் மீண்டும் அபிராமிக்கு தொடர்பு கொண்ட சுந்தரம், நான் நாகர்கோவிலுக்கு வந்து விட்டேன் என்று சொல்லி தான் இருக்கும் இடத்தை கூறியுள்ளார். 

அதன்படி சுந்தரம் சொன்ன இடத்துக்கு வந்த அபிராமியை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது அபிராமி கொடுத்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

“8  ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குடும்பத்தோடு பிரியாணி கடைக்கு சென்று  வந்தபோது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அடிக்கடி பிரியாணி வாங்க சென்றதால் எனக்கும் சுந்தரத்துக்கும் நெருக்கம் அதிகமானது. இதனால் குடும்பத்தை விட்டு விலகி செல்ல நினைத்தேன். சுந்தரமும் இதற்கு உடன்பட்டார். 

இதனால் 10 நாட்களுக்கு (குழந்தைகளைக் கொன்ற) முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சுந்தரம் வீட்டில் தங்கினேன். இதனால் எனக்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஜய்யோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய போதிலும், இரண்டு மாதம் பழகிய சுந்தரத்தை என்னால் கைவிட முடியவில்லை. 

இந்த நிலையில் கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு சந்தோசமாக வாழலாம் என்று சுந்தரம் சொன்னார். 
அதைக் கேட்டு, 30ஆம் இரவு மூன்று பேருக்கும் பாலில் மாத்திரைகள் கலந்து கொடுத்தேன். மறுநாள் (31ஆம் தேதி) காலை மூன்று பேரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் விஜய்யும், மகன் அஜய்யும் எழுந்துவிட்டனர். மகள் கார்னிகா எழுந்திருக்கவில்லை. அதனால் அவள் 30ஆம் தேதி இரவே இறந்துவிட்டாள் என நினைக்கிறேன்.

31ஆம் தேதி காலை விஜய் வேலைக்கு செல்லும்போது கார்னிகாவுக்கு முத்தமிடுவதற்காக பெட்ரூம் சென்றார். ஆனால், அவள் அசந்து தூங்குகிறாள். நீங்கள் சென்றால் எழுந்து விடுவாள். அதனால் செல்ல வேண்டாம் என்று கூறி விஜய்யை தடுத்து விட்டேன். அன்று (ஆகஸ்ட் 31) இரவு விஜய் வீட்டுக்கு வரவில்லை. அன்றைய தினம் அஜய்க்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். அவன் மயங்கி விட்டதால் கழுத்தை நெருக்கி கொன்று விட்டேன். 

வெளியூருக்கு செல்ல என்னிடம் பணம் இல்லாததால் தாலியை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்” என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இந்த வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும் சுந்தரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். 


இந்த நிலையில் சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரை வைத்து அபிராமி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். 

போலீசார் சொன்னபடி சுந்தரம், அபிராமிக்கு தொடர்பு கொண்டு எங்கிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

இதற்கு அபிராமி நாகர்கோயிலில் இருக்கிறேன் என்று சொன்னதும், சுந்தரத்தை அழைத்துக் கொண்டு போலீசார் நாகர்கோயில் புறப்பட்டனர். 

நாகர்கோயிலை அடைந்ததும் மீண்டும் அபிராமிக்கு தொடர்பு கொண்ட சுந்தரம், நான் நாகர்கோவிலுக்கு வந்து விட்டேன் என்று சொல்லி தான் இருக்கும் இடத்தை கூறியுள்ளார். 

அதன்படி சுந்தரம் சொன்ன இடத்துக்கு வந்த அபிராமியை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது அபிராமி கொடுத்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

“8  ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குடும்பத்தோடு பிரியாணி கடைக்கு சென்று  வந்தபோது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதையடுத்து அடிக்கடி பிரியாணி வாங்க சென்றதால் எனக்கும் சுந்தரத்துக்கும் நெருக்கம் அதிகமானது. 

இதனால் குடும்பத்தை விட்டு விலகி செல்ல நினைத்தேன். சுந்தரமும் இதற்கு உடன்பட்டார். 

இதனால் 10 நாட்களுக்கு (குழந்தைகளைக் கொன்ற) முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சுந்தரம் வீட்டில் தங்கினேன். இதனால் எனக்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

விஜய்யோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய போதிலும், இரண்டு மாதம் பழகிய சுந்தரத்தை என்னால் கைவிட முடியவில்லை. 

இந்த நிலையில் கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு சந்தோசமாக வாழலாம் என்று சுந்தரம் சொன்னார். 

அதைக் கேட்டு, 30ஆம் இரவு மூன்று பேருக்கும் பாலில் மாத்திரைகள் கலந்து கொடுத்தேன். 

மறுநாள் (31ஆம் தேதி) காலை மூன்று பேரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் விஜய்யும், மகன் அஜய்யும் எழுந்துவிட்டனர். 

மகள் கார்னிகா எழுந்திருக்கவில்லை. அதனால் அவள் 30ஆம் தேதி இரவே இறந்துவிட்டாள் என நினைக்கிறேன்.

31ஆம் தேதி காலை விஜய் வேலைக்கு செல்லும்போது கார்னிகாவுக்கு முத்தமிடுவதற்காக பெட்ரூம் சென்றார். ஆனால், அவள் அசந்து தூங்குகிறாள். நீங்கள் சென்றால் எழுந்து விடுவாள். அதனால் செல்ல வேண்டாம் என்று கூறி விஜய்யை தடுத்து விட்டேன். அன்று (ஆகஸ்ட் 31) இரவு விஜய் வீட்டுக்கு வரவில்லை. அன்றைய தினம் அஜய்க்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். அவன் மயங்கி விட்டதால் கழுத்தை நெருக்கி கொன்று விட்டேன். 

வெளியூருக்கு செல்ல என்னிடம் பணம் இல்லாததால் தாலியை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்” என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும் சுந்தரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். 


இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இருந்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஆனால் காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லாததால் இங்கு வரும் வழக்குகளை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் விசாரித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அபிராமியின் வழக்கு விசாரணை முடிந்து ஜூலை 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்க உள்ளது.

Trending News

Latest News

You May Like