#JUST IN : ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம்; கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்..!
இன்று (மே 19) பாஜக அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்துவது பற்றி கெஜ்ரிவால் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார்.
அவர்கள் எங்களுடைய கட்சியின் பின்னாலேயே வருகின்றனர். எங்களுடைய தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். என்னுடைய தனி உதவியாளரை (பிபவ் குமார்) சிறைக்கு அனுப்பி விட்டனர் என கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியின் எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி மந்திரிகளான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.