1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

#JUST IN : பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபா மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து வருவதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தாய் ஹீராபென் மோடியை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, கர்நாடகா மாநிலம் மைசூரில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியதில் காயமடைந்தனர். கார் டிவைடரில் மோதியதில் பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like