#JUST IN : தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமை செயலராக இருந்த விஜயகுமார் நிலச்சீர்த்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கலெக்டராக சினேகா நியமிக்கப்பட்டுள்ளார்.ஒட்டுமொத்தமாக 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.