1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மக்களே உஷார்..!! வடகிழக்கு பருவமழை தொடங்கியது: அதிகாரபூர்வ தகவல்..!!

#JUST IN : மக்களே உஷார்..!! வடகிழக்கு பருவமழை தொடங்கியது: அதிகாரபூர்வ தகவல்..!!

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகத்தில் தொடங்க இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் சற்று முன் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதக அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா, வடதமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like