1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கோவையில் தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி..!

1

கோவையில் பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த நான்கு தொழிலாளர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like