1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறக்கப்படும்..!!

#JUST IN : ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறக்கப்படும்..!!

நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்கள் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும்போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like

News Hub