#JUST IN : ஐ.எப்.எஸ்., அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

டில்லி சாணக்யபுரியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜிதேந்திர ராவத் வசித்து வந்தார். இவருக்கு வயது 40. இவர் இன்று காலை 6 மணிக்கு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது தாயார் அவருடன் வெளியுறவுத்துறை சங்கத்தின் முதல் மாடியில் வசித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: அந்த அதிகாரி பல நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். அவரது விபரீத முடிவிற்கு தெளிவான காரணம் தெரியவில்லை.
அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் எங்களுக்கு காலையில் வந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
"முதற்கட்ட விசாரணையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் டேராடூனில் தங்கியிருப்பதாகத் தெரியவந்தது. அவர் முதல் மாடியில் தங்கி நான்காவது மாடிக்குச் சென்று குதித்தார்," என்று அந்த அதிகாரி கூறினார்.