#JUST IN : பாஜகவில் இணைந்தார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதார் ஜாதவ். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கேதர் ஜாதவ் இவர் விரைவில் அரசியலில் நுழையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழவில் கேதார் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதார் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது.