1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..!

Q

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் M.தினேஷ்குமார். இவரது மனைவியும், பேரூராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினருமான சுமிதா. இப்பகுதியில், கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்ரவரி 25ம் தேதி அன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

 

இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போராடட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

 தடையை மீறி திருக்கழுக்குன்றத்தில் போராட்டம் நடத்த முயற்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கைது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like